tamilnadu

img

சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் 48 பேர் பாஜகவில் இருந்து விலகல்... கட்சிக்குள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்

போபால்:
மத்தியப்பிரதேசத்தில் பாஜகசிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள் 48 பேர், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றும்வகையில், கொண்டுவரப்பட் டுள்ள சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களை எதிர்த்தும், சொந்தக் கட்சிக்கு உள்ளேயே தாங்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை இனியும் சகிக்க முடியாது என்று கூறியும், அவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர்.

இதுதொடர்பாக, பாஜகவின் மாநில சிறுபான்மையினர் பிரிவுத்தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் “பாஜக முன்பு சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் அடல் பிகாரிவாஜ்பாய் ஆகியோரின் கொள் கைகளைப் பின்பற்றியது; பாகுபாட்டில் ஈடுபடவில்லை, சிறுபான்மையினர் உட்பட அனைவரையும் அழைத்துச் சென்றது!ஆனால், இப்போது அப்படியில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் முழு கட்சியும் இரண்டு(மோடி, அமித்ஷா) அல்லதுமூன்று நபர்களால் நடத்தப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.போபால் பாஜக சிறுபான்மையினர் பிரிவு துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆதில்கான், ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நாடாளுமன்றத்தில் அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு, பின்னர்வீடு வீடாகச் சென்று ஆதரவைக்கோருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்றுகிண்டலாக கேட்டுள்ளார்.

;